Saturday, May 8, 2010

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு

tamil-inaiya-payilarangam@googlegroups.comtamil-inaiya-payilarangam@googlegroups.comசாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றான்பாரதி. இக்கூற்று பாரதி வாழ்ந்த காலதில் அவன் கண்ட சமூகஅவலங்களின்  வெளிப்பாடு. மேலும் அன்று சாதிகள் பலநூறுஇருந்திடினும் சமுதாயத்தில்வெளிப்பட்டது மேல்சாதி, கீழ்சாதி எனும்இரு பிரிவுகள் மட்டுமே. ஆனால்இன்று நாட்டில் உள்ள அனைத்து சாதிகளும் தத்தம் சாதியினரின் எண்ணிக்கையை வெளிக்காட்டி அதை தமது பலமாகக் காட்டிடும் அவலமே அரங்கேறி வருகிறது. இதன் காரணமாகத்தான் இன்று அரசியல் போர்வை போர்த்திக்கொண்டுள்ள பல சாதித் தலைவர்களும் சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை கோருகிறாகள்.
உண்மையிலேயே ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலம் நாடுவோர் கேட்க வேண்டியதுசாதிமதங்களைக் கடந்த பொருளாதாரக் கணக்கெடுப்பே. இதன் மூலமே அடித்தட்டுமக்களின் எண்ணிக்கைக்கேற்ற வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டி நாட்டைமுன்னேற்றப் பாதைக்கு வழி நடத்திட முடியும்.

கவி. செங்குட்டுவன்,
ஊத்தங்கரை.

Friday, January 29, 2010

நிகர் நிலைப் பல்கலை கழக அங்கீகார இரத்து.

இன்று போதிய வசதிகள் இல்லை என்று கூறி 44 நிகர் நிலைப்பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையை பற்றி நாம் தீவிரமாகச் சிந்திக்க கடமை பட்டுள்ளோம். ஆம் இந்த நிகழ்வு எப்படி நிகழ்ந்தது, இது நிகழக் காரணமானவர் யார்? அங்கீகாரம் வழங்கிய யூஜிசி எனும் பல்கலைகழக மானியக் குழுவா? அரசாங்கமா? அல்லது அதில் படிக்கும்
மாணவர்களா?        இவர்களில் யாருமே இல்லை ஓர் பொதுநல வாதியின்
விண்ணப்பம்தான். இந்த பொது நலவாதி பிரச்சனையாக்காமல் இருந்திருந்தால் சம்மந்தப்பட்ட பல்கலைக் கழகங்களின் இன்றைய நிலை ஓகோ என்று சொல்ல வைத்திருக்கும். அப்படியானால் இத்தகு கல்வி நிறுவணங்களை அரசும்,அதிகாரிகளும் தொடர் ஆய்வு பல நூறு கோடி ருபாய் கல்வி மேம்பாட்டுப்பணிகளுக்கென நிதி உதவி வழங்கியுள்ளதே எப்படி?  சரியான ஆய்வைமேற்கொள்ளாமல் அங்கீகாரமும் வழங்கிவிட்டு, அரசு நிதி உதவிகளும்செய்துவிட்டு, அரசு ஒதுக்கீட்டில் மாணவர்களையும் சேர்த்துவிட்டு இன்றுஏதோ புதிதாக கண்டுபிடித்து விட்டதாகக் கூறி கூக்குரலிடுவது ஏன்? தற்போதுபாதிக்கப்படுவது யார்? அதில் பயிலும் அப்பாவி மாணவர்களும் அவர்தம்பெற்றோர்களும் அல்லவா. இதற்கெல்லாம் காரணமானவர்களை தண்டிப்பது யார்?எப்போது? எப்படி? இதுவே தற்போது நம்முன் உள்ள வினா, விடை கிடைக்குமா?

கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை.

Sunday, January 17, 2010

வணக்கம்!

நாட்டில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகள் பல, அவற்றில் சரியானவை சில சரியானவையாக ஏற்றுக்கொள்ளப்படுபவை பல. அதைகைய நிகழ்வுகளை குறித்த எனது எண்ணக் கருத்துக்களை வெளியிடவே இப்புதிய வலைப்பூ.
வாரீர் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்வோம்.

கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.