இது எப்படி பெற்ற சுதந்திரம்............
ஊத்தங்கரை அரசு மகளிர் மேநிலைப் பள்ளியில் நேற்று 08.07.2011 முதல் இன்று 09.07.2011 வரையில் புதிய தலைமுறை அறக்கட்டளை மற்றும் சென்னை காந்தி கல்வி நிறுவணம் சார்பில் ”இது எப்படிப் பெற்ற சுதந்திரம்”என்ற தலைப்பிலான நிகழ்வு நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான புகைப்படக் கண்காட்சி மற்றும் பயிற்சி முகாம் பயனுள்ள வகையில் அமைந்தது. கண்காட்சியில் இடம் பெற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பல்வேறு நிழற்படங்கள் மிகச் சிரமப்பட்டு சேகரிக்கப்பட்ட அரிய நிழற்படங்களாக அமைந்தது பாராட்டுக்குறியது.
மேலும் நிகழ்ச்சியில் திரு மாசிலாமணி, திரு வேடிகவுண்டர், திரு பெருமாள் ஆகிய மூன்று சுதந்திரப் போராட்ட தியாகிகள் சிறப்ப்பிக்கப்பட்டனர்.விழாவின் துவக்க நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர் திரு பெ.இராஜேந்திரன் அவர்கள் தலைமை உரையும், திரு செ. ஆனந் அவர்கள் வரவேற்புரையும் ஆற்ற புதிய தலைமுறை அறக்கட்டளையின் தலைமை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு அப்துல் கரீம் அவர்கள் அறக்கட்டளையின் பணிகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். பின்னர் தலைமை ஆசிரியர் திரு கவி.செங்குட்டுவன், மாவட்ட சிறப்பு அமைப்பாளர் திரு சி. கோபால கிருஷ்ணன், மாவட்ட நிக்ழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு சக்திவேல் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home