Friday, January 29, 2010

நிகர் நிலைப் பல்கலை கழக அங்கீகார இரத்து.

இன்று போதிய வசதிகள் இல்லை என்று கூறி 44 நிகர் நிலைப்பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையை பற்றி நாம் தீவிரமாகச் சிந்திக்க கடமை பட்டுள்ளோம். ஆம் இந்த நிகழ்வு எப்படி நிகழ்ந்தது, இது நிகழக் காரணமானவர் யார்? அங்கீகாரம் வழங்கிய யூஜிசி எனும் பல்கலைகழக மானியக் குழுவா? அரசாங்கமா? அல்லது அதில் படிக்கும்
மாணவர்களா?        இவர்களில் யாருமே இல்லை ஓர் பொதுநல வாதியின்
விண்ணப்பம்தான். இந்த பொது நலவாதி பிரச்சனையாக்காமல் இருந்திருந்தால் சம்மந்தப்பட்ட பல்கலைக் கழகங்களின் இன்றைய நிலை ஓகோ என்று சொல்ல வைத்திருக்கும். அப்படியானால் இத்தகு கல்வி நிறுவணங்களை அரசும்,அதிகாரிகளும் தொடர் ஆய்வு பல நூறு கோடி ருபாய் கல்வி மேம்பாட்டுப்பணிகளுக்கென நிதி உதவி வழங்கியுள்ளதே எப்படி?  சரியான ஆய்வைமேற்கொள்ளாமல் அங்கீகாரமும் வழங்கிவிட்டு, அரசு நிதி உதவிகளும்செய்துவிட்டு, அரசு ஒதுக்கீட்டில் மாணவர்களையும் சேர்த்துவிட்டு இன்றுஏதோ புதிதாக கண்டுபிடித்து விட்டதாகக் கூறி கூக்குரலிடுவது ஏன்? தற்போதுபாதிக்கப்படுவது யார்? அதில் பயிலும் அப்பாவி மாணவர்களும் அவர்தம்பெற்றோர்களும் அல்லவா. இதற்கெல்லாம் காரணமானவர்களை தண்டிப்பது யார்?எப்போது? எப்படி? இதுவே தற்போது நம்முன் உள்ள வினா, விடை கிடைக்குமா?

கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை.

2 comments:

  1. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் மறுமொழி பெட்டியில் உள்ள Word verification நிக்கிவிட்டால் மறுமொழி இடுவதற்கு அனைவருக்கும் எளிதாக இருக்கும் . சற்று அதை கவனிக்கவும் .

    ReplyDelete