தாகூரை நினைவு கூர்வதற்கான கொண்டாட்டம்
இந்தியாவின் புகழ் பெற்ற மகத்தான கவிஞர் ரபீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாளை நினைவு கூருவது பற்றி சீன-இந்திய பண்பாட்டு ஆண்டின் அம்சமாக பொது அறிவு போட்டியை நடத்துகின்றோம். இந்த போட்டியின் முதலாவது கட்டுரையில் பெய்ஜிங்கில் ரபீந்திரநாத் தாகூரின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நினைவு கொண்டாட்டம் பற்றி கூறுகின்றோம்.
1. தாகூரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு பெய்ஜிங்கில் எப்போது நினைவு கூட்டம் நடைபெற்றது?
2. எத்தனை அறிஞர்கள் இந்த நினைவு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்?
சரி, இப்போது எங்களுடன் சேர்ந்து இப்போட்டியின் முதலாவது கட்டுரையை கேளுங்கள்.
தாகூர் இந்தியாவில் மட்டுமல்ல உலகிலும் மிகவும் புகழ் பெற்ற கவிஞராக போற்றப்பட்டுள்ளார். தலைச்சிறந்த கவிஞர், எழுத்தாளர், இலக்கிவாதி, சமூக ஆர்வலர் என பல பெருமைகளை மக்கள் அவருக்கு சூட்டியுள்ளனர். அவர் படைத்த படைப்புகளில் "கீதாஞ்சலி","இலக்கற்ற பறவைகள்","பிறைநிலா"போன்றவை இடம் பெறுகின்றன. 1937ம் ஆண்டு தாகூர் கல்கட்டாவில் அமைந்துள்ள சாந்திநிதிகேதனில் இந்திய சர்வதேச பல்கலைக்கழகத்தில் சீனா தொடர்பான பாடப்பிரிவை நிறுவினார். சீன-இந்தியப் பண்பாட்டுப் பரிமாற்றத்துக்கு அவர் முக்கிய பங்கு ஆற்றினார். இந்த மகத்தான கலைஞரை நினைவு கூரும் வகையில் வெளிநாடுகளுடனான சீன மக்கள் நட்புச் சங்கம் இவ்வாண்டு பல பண்பாட்டு நடவடிக்கைகளை நடத்துகிறது. தாகூர் பிறந்த நாளான மே 7ம் நாளன்று தாகூர் பிறந்த 150வது நாளை நினைவுக் கொண்டாடுவது தொடர்பான பண்பாட்டு நடவடிக்கைகளின் துவக்க விழா பெய்ஜிங்கில் நடைபெற்றது. வெளிநாடுகளுடனான சீன மக்கள் நட்புச் சங்கத்தின் தலைவர் chen hao su, சீனாவுக்கான இந்திய தூதர் S.Jaishankar , சீனாவுக்கான வங்காள தேசத் தூதர் Munshi Faiz Ahmad ஆகியோர் இந்த துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.
துவக்க விழாவில் சங்கத்தின் தலைவர் chen hao su மகிழ்ச்சி நிறைந்த உணர்வுடன் உரை நிகழ்த்தினார். உலகின் கலையிலக்கிய வரலாற்றில் தாகூர் வெளிக்கொணர்ந்த பங்கினை அவர் பாராட்டி பேசினார். இது பற்றி அவர் மூன்று கருத்துக்களை தொகுத்து விளக்கினார்.
முதலில் தாகூர் இந்தியாவின் மிக மகத்தான நாகரிகத்தை வெளிக்கொணர்ந்தவராவார். புதிய காலத்தில் நாகரிகம் மீட்கப்படும் போக்கை உறுதிப்படுத்தியவராக அவர் திகழ்ந்தார். கவிதை படைப்பதன் மூலம் உலகிற்கு இந்தியாவின் பண்டைக்கால பண்பாட்டுப் பாரம்பரியத்தை விளக்கிக் கூறினார். இரண்டாவதாக, தாகூர் மகத்தான சீன நாகரிகத்தைப் புரிந்து கொண்டவர். சீன மக்களின் நெருங்கிய நண்பராவார். மாபெரும் மனித நேய எழுச்சியுடன் தாகூர் சீன மக்கள் மீது அன்பு கொண்டு இரு நாடுகளுக்கிடையில் நெருங்கிய தொடர்பை உருவாக்க பாடுப்பட்டார். ஆகவே அவர் சீன மக்களால் மதிப்புடன் போற்றப்பட்டு அன்பு செய்யப்பட்டார். மூன்றாவதாக, தாகூர் மனித குலத்தின் நாகரிக முன்னேற்றத்திற்குத் துணை புரிந்தவராவார். அத்துடன் இதற்காக அவர் அவரது முழு வாழ்வையும் அர்ப்பணித்தார்.
சீனாவுக்கான இந்திய தூதர் S.Jaishankar சீனாவில் தாகூரை நினைவு கூரும் நடவடிக்கைகளை நடத்துவதற்குப் பாராட்டு தெரிவித்தார். இவ்வாண்டு சீன-இந்திய பண்பாட்டுப் பரிமாற்ற ஆண்டாகும். இந்த நேரத்தில் இரு நாடுகளும் தாகூரை நினைவு கூரும் நடவடிக்கைகளை கூட்டாக நடத்துவது மிகவும் சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்தது. இது பற்றி அவர் கூறியதாவது.
ஆசிய சமூகத்தின் மறுமலர்ச்சியை தாகூர் வலியுறுத்தினார். என்பதில் ஐயமேயில்லை. அவரது கருத்து பொருளாதார மற்றும் அரசியல் துறைகளுக்கு ஏற்படுத்திய செல்வாக்கை இப்போதுதான் நாம் உணரத் துவங்கியுள்ளோம். ஆசிய நாடுகள் குறிப்பாக இந்தியா மற்றும் சீனா நெருக்கமாக ஒத்துழைப்பதன் மூலம் கூட்டு நலனை முன்னேற்றலாம். மேலும் வலிமைமிக்க இந்திய-சீன உறவை நிறுவுவது சர்வதேச பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சீன பாடப்பிரிவை நிறுவிய கலைஞர் தாகூருக்கு மிகச் சிறந்த அன்பளிப்பாக திகழ்கின்றது என்று தூதர் S.Jaishankar கூறினார்.
இந்த நினைவு நடவடிக்கைகளை நடத்துவது பற்றி சீனாவுக்கான வங்காள தேச தூதர் Ahmad வெளிநாடுகளுடனான சீன மக்கள் நட்புச் சங்கத்துக்கு நன்றி தெரிவித்தார். சீனா, இந்தியா, வங்காள தேசம் ஆகிய மூன்று நாடுகளின் அறிஞர்கள் ஒன்று கூடி, சீனாவில் கல்வியியல் ஆய்வை நடத்தினால் இம்மூன்று நாடுகளுக்கிடை பண்பாட்டுப் பரிமாற்றம் வலுப்படுத்தப்படும். இம்மூன்று நாடுகளின் மக்களுக்கிடையிலான நட்பு அதிகரிக்கும் என்று தூதர் Ahmad கருத்து தெரிவித்துள்ளார். அதேவேளையில் இந்த நடவடிக்கையில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை வழங்கியதற்காக சங்கத்தின் தலைவர் சென்னிடம் நன்றி தெரிவித்தார்.
சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்த நூற்றுக்கு மேற்பட்ட பண்பாட்டு மற்றும் கலையிலக்கிய துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் தாகூரை நினைவு கூரும் கூட்டத்தில் கலந்து கொண்டதோடு நினைவுத் தலைப்புகள் பற்றி கலந்தாய்வு மேற்கொண்டனர்.
அவர்களில் இந்தியாவின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சீன மற்றும் தென்கிழக்காசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் shao bao li அம்மையார் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
வெவ்வேறான பண்பாடுகளை ஆராய்வதில் தாகூர் வெளிக்காட்டியுள்ள முயற்சி, மனவுறுதி, திறமை என்பன சீனா, ஆசியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றைச் சேர்ந்த நாடுகளுக்கு நீங்காத நினைவை விட்டுச் சென்றுள்ளன. அதேவேளையில் இலக்கியச் செல்வாக்கு மற்றும் கல்வி துறைகளில் அவரது ஆற்றல் அழிக்கப்பட முடியாத பதிவுகள் இடம் பெறுகின்றன. தற்கால இந்திய-சீன நட்புறவின் மிக உறுதியான தங்கப் பாலத்துக்கு ஒப்பான பங்கை தாகூர் ஆற்றியுள்ளார் என்று shao bao li அம்மையார் தெரிவித்தார்.
சீன-இந்திய பண்பாட்டு ஆண்டு துவங்கும் வேளையில் தாகூரின் 150வது பிறந்த நாளை நினைவு கூரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று வெளிநாடுகளுடனான சீன மக்கள் நட்புச் சங்கத்தின் தலைவர் chen hao su கூறினார்.
மகத்தான கவிஞர், பண்பாட்டு கலையிலக்கியவாதியான தாகூர் மிகப்பல பங்கு ஆற்றியுள்ளார். அவருக்கும் சீன மக்களுக்குமிடை நட்பார்ந்த ஒத்துழைப்பு முயற்சியில் நாங்கள் மிகவும் கவனம் செலுத்தியுள்ளோம். தாகூர் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது சீன அறிஞர்களுடன் ஏற்பட்ட சிறந்த தொடர்பை அவர் நிலைநிறுத்தினார். சீன மக்கள் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட போது தாகூர் சீன மக்களுக்காக உரை நிகழ்த்தினார். எங்களது இந்நடவடிக்கையில் இந்திய மற்றும் வங்காள தேச தூதர்களும் கலந்து கொண்டமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நம் மூன்று நாடுகளிடை உறவு மிகவும் நெருக்கமானது என்பதை இது எடுத்துக்காட்டியுள்ளது என்றார் அவர்.
சீன-இந்திய பண்பாட்டு ஆண்டு என்னும் பொது அறிவு போட்டியின் முதலாவது கட்டுரையை கேட்டீர்கள். நாளை இந்த பொது அறிவுப் போட்டியின் இரண்டாவது கட்டுரை ஒலிபரப்பப்படும். தவறாமல் கேளுங்கள். போட்டியில் விறுவிறுப்பாக கலந்து கொண்டு பங்கு ஆற்றுங்கள். அருமையான பரிசு பெறும் வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கும்
இந்தியாவில் நடைபெற்ற நினைவு நடவடிக்கைகள்
இந்தியாவின் புகழ் பெற்ற மகத்தான கவிஞர் ரபீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாளை நினைவு கூருவது பற்றி சீன-இந்திய பண்பாட்டு ஆண்டின் அம்சமாக பொது அறிவு போட்டியை நடத்துகின்றோம். இந்த போட்டியின் இரண்டாவது கட்டுரையில் இந்தியாவில் ரபீந்திரநாத் தாகூரின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நினைவு கொண்டாட்டம் பற்றி கூறுகின்றோம். கட்டுரை வழங்குவதற்கு முன் இது தொடர்பான இரண்டு வினாக்களை கவனமாக கேளுங்கள்.
1. நினைவு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட இந்திய நிதி அமைச்சரின் பெயரை எழுதுக.
2. கவிஞர் தாகூரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு 2011ம் ஆண்டு முழுவதும் இந்தியாவில் எத்தனை நினைவு நடவடிக்கைகள் நடைபறவுள்ளன?
சரி, இப்போது எங்களுடன் சேர்ந்து இப்போட்டியின் இரண்டாவது கட்டுரையை பாருங்கள்.
மே 7ம் நாள் பெய்ஜிங்கில் தாகூரின் 150வது பிறந்த நாளை நினைவு கூரும் போது புதுதில்லியில் இதே போன்ற நினைவு நடவடிக்கையும் நடைபெற்றது.
எட்டாத வானை என் மனத்தால் அணைக்கிறேன். அழகான காட்சியிடங்கள் என்னுடன் பேசுகின்றன. என் ஆத்மா இசை மூலம் பதிலளிக்கும் என்று இந்த கவிதை வர்ணிக்கின்றது.
மே 7ம் நாள் முற்பகல் ஒரு பெண் உணர்வுப்பூர்வமாக இக்கவிதையை வாசித்ததுடன் தாகூர் பிறந்த 150வது ஆண்டு நினைவு கூரும் கூட்டம் தில்லியில் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், ஆளும் கட்சியான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி அம்மையார், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா உட்பட இந்திய அமைச்சரவையின் முக்கிய உறுப்பினர்கள் இந்த நினைவு கூட்டத்தில் கலந்து கொண்டனர். அரசு அலுவலர்கள் நினைவு கூட்டத்தில் கலந்து கொள்வது இந்தியாவில் தாகூருக்கான முக்கியத்துவத்தையும், தாகூர் இந்தியாவுக்கு ஆற்றிய பங்கையும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.
கூட்டத்தில் தலைமை அமைச்சர் மன்மோகங் சிங் முக்கிய உரை நிகழ்த்திய போது, இந்திய வரலாற்றில் தாகூர் வகிக்கும் சிறப்பு நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். தாகூரின் மனித நேயமும் பல்வேறு நாடுகளுடன் அவர் மேற்கொண்ட பரிமாற்றமும் வெளிநாடுகளுக்கு இந்தியா பண்பாட்டுப் பரவலை வளர்ப்பதற்குத் தலைசிறந்த வாய்ப்பினை வழங்கியுள்ளன. இது பற்றி அவர் கூறியதாவது.
தாகூர் உலகில் பரவச்செய்த மனித நேயச் சிந்தனை தற்போதைய உலகில் பல ஒத்த கருத்துக்களை எழுப்பச் செய்துள்ளன. கீழை மற்றும் மேலை உலகுக்கிடையிலான வெவ்வேறான நாகரிகங்கள் நிலைநிறுத்தப்பட வேண்டும். அவற்றின் எழுச்சி ஒத்தத் தன்மையுடையது. தற்போதைய மக்கள் அவர்களின் உள்ளார்ந்த பலவீனத்தைச் சமாளிப்பதற்கு இது வழிகாட்டும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலகின் பல இடங்களில் குறிப்பாக தாகூருடன் தொடர்பு கொண்ட நாடுகளில் அவரை நினைவு கூரும் நடவடிக்கைகள் நடந்தன. இது மிகச் சிறந்த சாட்சியாக திகழ்கின்றது என்று தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் கூறினார்.
இதற்கிடையில் இந்திய பண்பாட்டு அமைச்சர் குமாரி செல்ஜாவும் நினைவு கூரும் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.
தாகூர் உலகத்துக்கு இந்திய பண்பாட்டை அறிமுகப்படுத்திய தூதராக விளங்கினார். கவிதை, இசை, நாடகம், ஓவியம் முதலிய துறைகளில் தாகூரின் செழுமையான அனுபவங்கள் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தின. அவரது தத்துவச் சிந்தனை அவர் தோற்றுவித்த சர்வதேச பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று பண்பாட்டு அமைச்சர் குமாரி செல்ஜா கூறினார்.
மகத்தான கவிஞர் தாகூரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு மே 7ம் நாள் முதல் 9ம் நாள் வரை புதுதில்லி, கல்கத்தா, வங்காள தேசத்தின் தலைநகர் டாக்கா ஆகியவற்றில் ஒரே நேரத்தில் பல நினைவு நடவடிக்கைகள் நடைபெற்றன. 2011ம் ஆண்டு முழுவதும் இந்தியாவில் 200க்கும் அதிகமான நினைவு நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன. வெளிநாடுகளில் நினைவு நடவடிக்கைகளை நடத்த இப்போது திட்டமிடப்பட்டு வருகின்றது. அப்போது இந்திய அரசு போதியளவில் நிதி ஆதரவு வழங்கும். இது பற்றி இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் இந்நினைவு கூட்டத்தில் கூறியதாவது
மனித குலத்தின் ஒற்றுமையை இடைவிடாமல் முன்னேற்றி ஒருவருக்கொருவர் உதவி, அன்பாக பழகுவதற்கு சிறந்த முறையில் பங்கு ஆற்றியவர்களைப் பாராட்டும் வகையில் இந்திய அரசு தாகூர் பெயரிலான சர்வதேச விருதை நிறுவத் தீர்மானித்துள்ளது. இதற்காக தேர்வுக் குழுவை இந்திய தலைமை அமைச்சர் தானே உருவாக்குவார். ஆண்டுதோறும் உலகளவில் தலைசிறந்தவர் ஒருவரை தேர்ந்தெடுத்து விருதளித்து பாராட்டும். தாகூர் பரப்பிய மனித குலத்தின் பொறுமையைப் பாராட்டுவோர் தமது செயல்களின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்று தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் கூறினார்.
இந்திய பண்பாட்டு ஆணையம் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, உலகின் 21 நாடுகளில் இந்தியா 24 தாகூர் பண்பாட்டு மையங்களை நிறுவியுள்ளது. அவற்றின் மூலம் பண்பாட்டுப் பரவல் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. தாகூரை மையமாக கொண்ட அமைப்புமுறையின் மூலம் இந்தியா உலகளவில் அழகான பாலமொன்றை நிறுவியுள்ளது என்று உணரலாம்.
இந்திய அரசு மேற்கொண்டுள்ள பல நடவடிக்கைகள் கல்வியியல் துறையால் ஆதரிக்கப்படுகின்றன.
தில்லி பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறையில் பணிபுரிகின்ற பேராசிரியர் Sreemati Chkrabarti இது பற்றி எமது செய்தியாளரிடம் கூறிய கருத்தை கேட்போம்
பண்பாட்டுப் பரவல் மிகவும் முக்கியமானது. இதன் மூலம் பல்வேறு நாடுகளின் பொது மக்களுக்கிடை உறவு நெருக்கமாக்கப்படும். இது மக்களுக்குள் நட்பை ஏற்படுத்தும். இது நாட்டின் தூதாண்மை முயற்சியின் அடிப்படையாக உணரலாம் என்று அவர் கூறினார்.
மகத்தான கவிஞர் தாகூரின் பேத்தி பேரன்கள் தாத்தாவின் சிந்தனை, தத்துவம் மற்றும் படைப்புகளை வெளிக்கொணர்ந்துள்ளனர். சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தின் அறிஞராக போற்றப்படுகின்ற தாகூரின் கொள்ளுப் பேரன் Saranindranath Tagore நமது செய்தியாளருடன் கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்.
தாகூர் தன் வாழ்நாளில், உலகின் பல்வேறு இடங்களில் பயணம் மேற்கொண்ட போது உள்ளூரின் புகழ் பெற்ற அறிஞர்கள் மற்றும் சமூகத்தின் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு பழகினார். அவரது படைப்புகள் பலப்பல மொழிகளில் பெயர்க்கப்பட்டு பொது மக்கள் படிக்க விரும்பும் படைப்புகளாகியுள்ளன. இந்தியாவுக்கும் இதர நாடுகளுக்குமிடை பண்பாட்டுப் பரிமாற்றத்துக்குத் தாகூர் நட்பு விதையை நட்டார் என்று Saranindranath Tagore கூறினார். திரு Saranindranath Tagore மேலும் கூறியதாவது.
தாகூர் இந்திய பண்பாட்டை அடையாளப்படுத்தும் மனிதராவார். அவரது வாழ்க்கை அனுபவம் மற்ற நாடுகளுடன் நட்பாக பழகும் இந்தியாவுக்கு சிறந்த பங்கு ஆற்றியுள்ளது. அவர் பரப்பிய மனித குலத்தின் பொறுமை என்ற எழுச்சி தொடர்ந்து வழிகாட்டும் பங்கை வெளிக்கொணரும் என்று திரு Saranindranath Tagore கூறினார்.
சரி நேயர் நண்பர்களே, சீன-இந்திய பண்பாட்டு ஆண்டு என்னும் பொது அறிவு போட்டியின் 2வது கட்டுரையை கேட்டீர்கள். நாளை இந்த பொது அறிவுப் போட்டியின் 3வது கட்டுரை ஒலிபரப்பப்படும். தவறாமல் கேளுங்கள். போட்டியில் விறுவிறுப்பாக கலந்து கொண்டு பங்கு ஆற்றுங்கள். அருமையான பரிசு பெறும் வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கும்
சீனாவில் தாகூரின் படைப்புகள் தொடர்பான ஆய்வு
மகத்தான கவிஞர் ரபீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாளை நினைவு கூருவது பற்றி சீன-இந்திய பண்பாட்டு ஆண்டின் அம்சமாக பொது அறிவு போட்டியை நடத்துகின்றோம். இந்த போட்டியின் 3வது கட்டுரையில் தாகூரின் படைப்புகள் குறித்து சீன அறிஞர்கள் செய்த ஆய்வுகள் பற்றி முக்கியமாக விளக்கிக் கூறுகின்றோம்.
கட்டுரை வழங்குவதற்கு முன் இது தொடர்பான இரண்டு வினாக்களை கவனமாக கேளுங்கள்.
1. தாகூரின் படைப்புகளை ஆராய்வதன் மூலம் முதலாவதாக பட்டம் பெற்றவரின் பெயரைக் குறிப்பிடுக.
2. சிவ பெருமான் பற்றிய எண்ணங்கள் தாகூரின் மனதில் எந்த அளவில் உள்ளன?
தாகூர் இந்தியாவில் மட்டும் புகழ் பெற்ற கவிஞராக இருக்கவில்லை. சீனாவின் இலக்கியத் துறையிலும் ஆழ்ந்த செல்வாக்குக் கொண்டுள்ளார். அவர் சீன-இந்திய பண்பாட்டுப் பரிமாற்ற வரலாற்றில் மாபெரும் பங்கு ஆற்றியுள்ளார். அவரைப் போதியளவில் நினைவு கூரும் நடவடிக்கைகள் நடைபெறுவது வரவேற்கத்தக்கது. சீனாவில் தாகூரின் படைப்புகள் தொடர்பான ஆய்வு 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிறது எனலாம். சீன சமூக அறிவியல் கழகத்தின் தெற்காசிய ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த லீயூச்சியன் என்பவர், தாகூரின் படைப்புகளை ஆராய்வதன் மூலம் பட்டம் பெற்ற முதல் சீனவராவார். 1981ம் ஆண்டு சீனாவில் புகழ் பெற்ற அறிஞர் ji xian linஇன் தலைமையில் நடைபெற்ற பட்டம் பெறுவதற்கான நேர்முகத்தில் "தாகூரின் குறும் புதினத்தின் புத்தாக்கம்"பற்றி ஆய்வுக் கட்டுரையை அவர் வாசித்தார். அவர் விளக்கிய நுணுக்கமான கருத்துக்கள் இந்த நேர்முகத்தில் கலந்து கொண்ட நிபுணர்களால் புகழ்ந்து பாராட்டப்பட்டன. அவர் வெற்றியையும் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். எமது செய்தியாளருக்கு பேட்டியளித்த போது அவர் கூறியதாவது.
தாகூரின் குறும் புதினங்கள் கலை ஈர்ப்பு மிகுந்தவை. இந்திய விவசாயிகள் மீதான அன்பான உணர்வை இவற்றில் நிறைவாக படிக்க முடியும். இந்த உண்மையான உணர்வு நம்மையும் ஆட்கொள்ளும். அவர் கவிஞராக இருந்ததால் அவர் படைத்த குறும் புதினங்களில் கவிதையுணர்ச்சி நிறைந்த அம்சங்களை உணரலாம்.
தாகூரின் படைப்புகளை ஆய்வு செய்வதன் மூலம் முதலில் முதுகலை பட்டம் பெற்றவர் யார்?
தாகூரின் படைப்பு "கீதாஞ்சலி"யை ஆய்வு செய்து zeng qiong என்னும் பெண்மனி முனைவர் பட்டம் பெற்றார்.
அவர் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2007ம் ஆண்டு ஜுலை திங்கள் வரையான காலத்தில், சீன-இந்திய கல்வி பரிமாற்றத் திட்டப்பணியின் மூலம் இந்தியாவில் சிறப்பு கல்வி பெற்றார். அவர் இந்தியாவின் சர்வதேசப் பல்கலைக்கழகத்தின் வங்காள மொழித் துறையில் வங்காள மொழி இலக்கியத்தை படித்தார். "கீதாஞ்சலி" தொடர்பான பல்வகை மொழிபெயர்ப்புகளை ஆராய்ந்த அடிப்படையில் அவரது ஆய்வுக் கட்டுரையை எழுதினார். 2009ம் ஆண்டு ஜுன் திங்கள் அவர் முனைவர் பட்டம் பெற்றார்.
"கீதாஞ்சலி"கவிதைத் தொகுப்பு நோபல் இலக்கிய பரிசு பெற்ற படைப்பாக திகழ்கின்றது. தற்கால இலக்கிய வரலாற்றில் இந்தப் படைப்பு மிக அதிக செல்வாக்கை கொண்டுள்ளது. "கீதாஞ்சலி" கவிதைத் தொகுப்பில் தாகூர் தாம் மிகவும் நம்பிக்கை கொண்ட கடவுளுக்கு முன்னால் தனது அரசியல் நிலைப்பாடு, தத்துவக் கண்ணோட்டம், இலக்கியத் தத்துவம் ஆகியவற்றையும் தனது மகிழ்ச்சி மற்றும் வேதனையையும் விளக்கிக் கூறுகிறார். தாம் விரும்பிய மன்னராட்சியையும் அவர் இந்த கவிதைத் தொகுப்பில் வர்ணித்துள்ளார். ஆகவே "கீதாஞ்சலி" கவிதைத் தொகுப்பை படிக்கும் போது தாகூரின் சிந்தனையை ஆழமாக அறிந்து கொள்ளலாம். தவிரவும், இது சீனாவில் வெளிநாட்டு இலக்கியத்தை மொழியாக்குவதற்கு ஒரு மாதிரியாக கருதப்படலாம்.
Zeng qiong தவிர, liu lian என்பவரும் சீனாவில் தாகூரின் படைப்புகள் பற்றிய ஆய்வில், இன்னொரு திறமைசாலியாக அழைக்கப்படுகின்றார். தாகூரின் கவிதைகளில் சிவ பெருமானின் தோற்றம் பற்றி அவர் ஆய்வுக் கட்டுரை எழுதினார். 2007ம் ஆண்டு இந்த கட்டுரையின் மூலம் அவர் முதுகலை பட்டம் பெற்றார்.
சிவ பெருமான் இந்தியாவின் மதத்தத்துவங்களின் சிக்கலான இருவேறு தன்மைகளை வெளிப்படுத்தும் கடவுளாகும். சிவ கடவுளுக்கு நல்ல குணம், கோபம், உற்சாகம் உற்சாகமின்மை ஆகியவை உண்டு. அவர் ஆக்கவும் செய்வார், அழிக்கவும் செய்வார்.
சிவ பெருமானை தனது ஆய்வு மாதிரியாக தேர்வுசெய்வது பற்றி liu lian கூறியதாவது.
சிவ பெருமான் பற்றிய எண்ணங்கள் தாகூரின் மனதில் மையமாக உள்ளன. படைப்பாளர் குறிப்பாக கவிஞராகிய தாகூர் வாழ்க்கையை வெளிப்படுத்தும் போது தனது சிந்தனையை கற்பனையுடன் இணைப்பது இயல்பே. தாகூரின் கவிதைகளில் மனதின் உள்ளார்ந்த உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்தப்படுகின்றது. ஆகவே அவரது கவிதைகளில் தாம் கொண்டுள்ள இரட்டைத் தன்மை மற்றும் முரண்பாட்டுக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. சமூகம் பற்றி மனநிறைவின்மையை தெரிவிக்கும் போது சிவ பெருமானின் கருத்துக்களைப் பயன்படுத்தினார். சிவ பெருமானின் கூற்றை மேற்கோள்காட்டி சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றிய தனது கருத்துகளை வெளிப்படுத்த தாகூர் முயன்றார் என்று liu lian விவரித்தார்.
தாகூர் ஒரு தலைசிறந்த சமூகவாதியாவார். அவரது சமூக நடைமுறைகள் சமூக அரசியல், மதத் தத்துவம், பண்பாடு, கல்வி முதலிய துறைகளுடன் தொடர்புடையவை. இலக்கியத் துறையில் புத்தாக்கம் முதல் தத்துவம் வரையான பிரிவுகளில் தாகூர் முக்கியமான கருத்துக்களைக் கொண்டிருந்தார். இவையும் அவரது கவிதைச் சிந்தனையை உருவாக்கியுள்ளன.
சீனாவில் ji xian lin, zeng qiong, liu lian ஆகியோர் மட்டுமல்ல மேலும் பல அறிஞர்கள் தாகூரின் கவிதைகளை ஆராய்ச்சி செய்கிறார்கள்.
சீன-இந்திய ஆய்வு மன்றத்தின் செயலாளரும், சிந்தோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான Hou chuan wen சீனாவில் தாகூரின் கவிதைகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தன் மூலம் 2004ம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார்.
தாகூரின் கவிதைகளை ஒப்பிட்டு ஆய்வு செய்வதை தெரிவு செய்ய காரணம் என்ன?இது பற்றி அவர் கூறியதாவது.
இலக்கியம், சமூக அரசியல், மதத் தத்துவம், பண்பாட்டுக் கல்வி ஆகியவற்றைத் தாகூர் தனது படைப்புகளுடன் இணைந்தார். வெளிநாடுகளில் தாகூரின் படைப்புகள் பற்றி அதிகமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவரது சிந்தனை குறிப்பாக இலக்கிய சிந்தனை அதாவது கவிதைச் சிந்தனை பற்றி ஆய்வுகள் குறிப்பிட்ட அளவில் பலவீனமானவை. ஆகவே நான் தாகூரின் கவிதையியலை ஆராயத் தீர்மானித்தேன் என்று அவர் கூறினார்.
சீனாவில் இவர்கள் உட்பட பல அறிஞர்கள் இப்போது தாகூரின் படைப்புகளை ஆராய்வதில் மேலும் உற்சாகம் காட்டியுள்ளனர்.
அவர்கள் ஆய்வில் பெற்றுள்ள பலன்கள் மற்றும் ஆக்கங்களை இலக்கிய தத்துவக் கண்ணோட்டத்தில் பார்த்தால், சீன வாசகர்களுக்கு தாகூர் பற்றிய புத்தம்புதிய தோற்றம் காணக்கிடைக்கும். மகத்தான கவிஞர் தாகூரை ஆராய்வதன் மூலம் இலக்கியத்துறையிலான சீன-இந்திய நட்பும் மேலும் அதிகரிக்கும். இரு நாட்டு மக்களுக்கிடையில் தத்துவ அடிப்படையிலான பரிமாற்றங்களும் மேலும் சுறுசுறுப்பாக இருக்கும். எதிர்காலத்தில் சீனாவில் தாகூர் அவர்களையும் அவரது படைப்புகளையும் ஆராயும் போக்கு மேலும் உயரும் என்பதில் ஐயமேயில்லை.
சீன-இந்திய பண்பாட்டு ஆண்டு என்னும் பொது அறிவு போட்டியின் 3வது கட்டுரையை கேட்டீர்கள். நாளை இந்த பொது அறிவுப் போட்டியின் 4வது கட்டுரை ஒலிபரப்பப்படும். தவறாமல் கேளுங்கள். போட்டியில் விறுவிறுப்பாக கலந்து கொண்டு பங்கு ஆற்றுங்கள். அருமையான பரிசு பெறும் வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கும்
சீனாவில் தாகூரின் படைப்புகள் வெளியிடப்படும் நிலைமை
இந்தியாவின் புகழ் பெற்ற மகத்தான கவிஞர் ரபீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாளை நினைவு கூருவது பற்றி சீன-இந்திய பண்பாட்டு ஆண்டின் அம்சமாக பொது அறிவு போட்டியை நடத்துகின்றோம். இந்த போட்டியின் 4வது கட்டுரையில் கவிஞர் தாகூரின் படைப்புகள் சீனாவில் வெளியிடப்படுவது பற்றிய தகவல்கள் பற்றி கூறுகின்றோம்.
கட்டுரை வழங்குவதற்கு முன் இது தொடர்பான இரண்டு வினாக்களை கவனமாக கேளுங்கள்.
1. தாகூருக்கும் எந்த நிறுவனத்துக்குமிடையில் பிரிக்கப்பட முடியாத உணர்வு உண்டு?
மக்கள் வெளியீட்டகத்தின் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
2. தாகூரின் படைப்புத் தொகுப்பு எத்தனை ஆண்டுகளில் நிறைவேறப்படும்?
தாகூர் சீன மக்களின் நண்பகமான நண்பராகினார். இரு நாடுகளின் பண்பாட்டுப் பரிமாற்ற வரலாற்றில் அவர் முக்கிய பங்கு ஆற்றினார். 1915ம் ஆண்டு முதல் அவரது படைப்புகள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை மிகப் பல வாசகர்களால் வரவேற்கப்படுகின்றன. சீனாவில் விற்பனையிலுள்ள தாகூரின் படைப்புகளின் எண்ணிக்கை 150க்கு மேலாகும். நோபல் இலக்கிய விருதைபெற்ற"கீதாஞ்சலி"என்ற படைப்பு 40க்கும் மேட்பட்ட மொழிபெயர்ப்புகள் இவற்றில் அடங்கும். ஆகவே தாகூரின் படைப்புகள் சீனாவில் எப்படி வெயிடப்படுகின்றது என்பது பற்றி ஆராயலாம்.
ஆமாம். அவரது படைப்புகளை வெளியிடும் நிறுவனம் சீன வணிக அச்சிட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் சீனாவில் 1897ம் ஆண்டில் நிறுவப்பட்ட பின் சீனாவின் நவீன வெளியீட்டுத் துறை துவங்குவதை கோடிட்டுக் காட்டுகின்றது. நூறு ஆண்டுகளாக அச்சிட்டு வெளியிடும் துறையில் ஈடுபட்டுள்ள வணிக அச்சிட்டு நிறுவனம் இவ்வாண்டு வெளியிட்ட தாகூரின் படைப்புகளில் "வாழ்க்கை பற்றி தாகூர் பேசுவது","கல்வி தொடர்பான தாகூரின் கருத்துக்கள்","இலக்கியம் தொடர்பான தாகூரின் கருத்துக்கள்"ஆகியவை அடங்கும்.
இது பற்றி இந்த தொகுப்பை பதிபாசிரிப்பதற்கு பொறுப்பான பதிபாசிரியர் feng Ai zhen அம்மையார் புகந்து மதிக்கிறார். வணிக புத்தக அச்சிட்டு நிறுவனத்துக்கும் தாகூருக்குமிடை அனுபவங்களை அவர் நீளாய்வு கூருந்து பேசுகிறார்.
தாகூருக்கும் வணிக புத்தக அச்சிட்டு நிறுவனத்துக்குமிடையில் பிரிக்கப்பட முடியாத உணர்வு உண்டு. சீனாவில் வெளியிடப்பட்ட முதலாவது தாகூரின் படைப்பு வணிக புத்தக அச்சிட்டு நிறுவனத்தால் பதிப்பாசிரிக்கப்பட்டு அச்சிடப்பட்டது என்று அவர் கூறினார்.
1921ம் ஆண்டு ஷாங்காய் மாநகரில் அமைந்த வணிக புத்திக அச்சிட்டு நிறுவனம் தாகூர் எழுதிய "வசந்தத்தின் புழக்கம்"என்ற நாடகப் படைப்பை வெளியிட்டது. அந்த ஆண்டு தாகூர் படைத்த நாடகத் தொகுப்பும் வெளியிடப்பட்டன. 2011ம் ஆண்டு "தாகூரின் சிறந்த கட்டுரைகள் அடங்கிய மொழியாக்க தொகுப்பு"தாகூரின் 150வது பிறந்த நாளுக்கான அன்பளிப்பாக வணிக புத்தக அச்சிட்டு நிறுவனம் வெளியிட்டது.
இது பற்றி feng Ai zhen அம்மையார் கூறியதாவது.
நான் மற்றவரை நேசிக்கின்றேன். நானும் மற்றவரால் நேசிக்கப்படுகின்றேன் என்ற தாகூரின் கூற்றால் நான் மனமுருகப்பட்டேன். முதுமையாகிய போது பெருமையுடன் இந்த வாக்கியத்தை வெளிப்படையாக பேசினால் அவர் வாழ்ந்த வாழ்க்கை மதிப்புக்குரியது. மனதில் அன்பு உள்ளவர் இத்தகைய எளிதான அவரது வாழ்க்கையை சுருக்கும் வாக்கியத்தை பேச முடியும். என் வாழ்க்கை சாதாரணமாக இருக்கின்றது. ஆனால் நான் வாழ்வில் உணர்வுபூர்வமாக செயல்பட வேண்டும் என்று அவர் தாகூர் படைத்த நாடகத் தொகுப்பைப் பதிபாசிரித்த உணர்வை வர்ணிக்கிறார்.
தாகூர் உலகின் வாசகர்களால் அறிந்து கொள்ளப்பட்ட கவிஞர். "கீதாஞ்சலி" உள்ளிட்ட 8 கவிதைத் தொகுப்புகள் ஆங்கிலத்தில் பல்வேறு நாடுகளால் வெளியிடப்பட்டன. மிகப் பல வாசகர்களால் இவை ஏற்றுக் கொள்ளப்பட்டவை. சீன ஒலி மற்றும் ஒளி வெளியீட்டக நிறுவனம் 5 ஆண்டுகளை பிடித்து 2010ம் ஆண்டில் இந்த 8 தொகுப்புகள் முழுவதையும் சீன வாசகர்களின் கண்முன்னால் வெளியிட்டது.
இந்த தொகுப்பைத் தொகுப்பதற்குப் பொறுப்பான பதிப்பாசிரியர் gao zi ru அம்மையார் இந்த தொகுப்பு நூல்களின் தனிச்சிறப்பை பற்றி கூறியதாவது.
நாங்கள் வெளியிட்ட தொகுப்புகள் ஆங்கிலத்தில் இருக்கின்ற 8 கவிதைத் தொகுப்புகளாகும். இந்த நூல்களில் ஆங்கிலத்துக்குச் சமமான சீன மொழி விளக்கம் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கவிதையின் மொழிபெயர்புக்கு பின் கருத்துரை சேர்க்கப்படுகின்றது. இளம் வாசகர்கள் தாகூரின் கவிதைகளை படிக்கும் போது இவை உதவி வழங்கும்.
சீனாவில் சில தலைமுறையினர்கள் தாகூரின் கவிதைகளை படித்து ரசிக்கின்றனர். தாகூர் சீனாவுக்கு ஏற்படுத்திய செல்வாக்கு மிக ஆழந்தது என்று gao zi ru அம்மையார் பாராட்டியுள்ளார்.
கவிதைகள் தவிர தாகூர் படைத்த புதினமும் சீனாவில் மிகபரந்தளவில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
2005ம் ஆண்டு சீன மொழியில் மொழியாக்கப்பட்ட தாகூரின் புதினத்தில் அவர் படைத்த அனைத்து குறுங்கடைகளும் குறுகிய மற்றும் நீளமான கதைகளும் சேர்க்கப்படுகின்றன. இவற்றை பதிப்பாசிரிப்பதற்குப் பொறுப்பான zhang hui jun அம்மையார் இந்த தொகுப்பு வேலை பற்றி கூறியதாவது.
தாகூரின் புதினம் இந்தியாவின் அப்போதைய சமூக வெளிப்பாடாக திகழலாம். 19வது நூற்றாண்டில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலைமையை இந்த புதினத்தைப் படிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்திய மக்கள் மீது தாம் கொண்டுள்ள அன்பு மற்றும் அனுதாபம் ஆகியவற்றை இந்த புதினம் எடுத்துக்காட்டுகின்றது.
வங்காள மொழியில் தாகூரின் படைப்புத் தொகுப்பு வெளியிடுவது சீனாவிலுள்ள வங்காள மொழித் துறை பல ஆண்டுகளாக நிறைவேற்ற விரும்பிய கனவாகும். அதற்கான ஆயத்த பணி மக்கள் வெளியீட்டகத்தின் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
தாகூரின் படைப்புத் தொகுப்புக்கு ஒரு கோடிக்கு மேட்பட்ட எழுத்துக்கள் உண்டு. 5 ஆண்டுகளில் இந்த தொகுப்பு வேலை நிறைவேற எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய அரசும் வங்காள தேச அரசும் இதன் வெளியீட்டில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளன. இந்திய அரசுத் தலைவரும் சிறப்பாக வாழ்த்துச் செய்தியை அனுப்பினார். தாகூரின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் வாய்ப்பினை மூலம் சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடை இலக்கியம் மட்டுமல்ல சமூக வாழ்க்கியிலான நட்பும் வளர்ச்சியடையச் செய்துள்ளது.
தலைமுறை தலைமுறையாக சீன-இந்திய நட்பு வளர்வது இரு நாட்டு மூத்த தலைவர்கள் மற்றும் மக்கள் நீண்டகால முயற்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
சீன-இந்திய பண்பாட்டு ஆண்டு என்னும் பொது அறிவு போட்டியின் 4வது கட்டுரையைக் கேட்டீர்கள். இதுவரை அறிவுப் போட்டிக்கான 4 கட்டுரைகளும் ஒலிபரப்பபட்டுள்ளன. போட்டியில் விறுவிறுப்பாக கலந்து கொண்டு பங்கு ஆற்றுங்கள். அருமையான பரிசு பெறும் வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கும்
No comments:
Post a Comment