Tuesday, January 14, 2025
ஜோதிநகர் பள்ளியில் பொங்கல் விழா - 2025
ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (13.01.2025) பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
முன்னதாக பள்ளி இறைவணக்கக் கூட்டத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார். பலவண்ண ஆடைகளோடு வந்திருந்த மாணவர்களுக்கு பொங்கல் வாழ்த்தை பகிர்ந்துக் கொண்டார்.
தொடர்ந்து வண்ணக் கோலங்களால் அலங்கரிக்கப்பட்ட பள்ளி வளாகத்தில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் புதுப்பாணைகளில் பொங்கல் வைக்கப்பட்டு.
இயற்கைக் கடவுளான சூரியனுக்கு படையல் வைக்கப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவாக வழங்கப்பட்டது.
இன்றைய நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வட்டாரக் கல்வி அலுவலர் திரு ச. லோகேஷா அவர்கள் கலந்துக்கொண்டார்.
நிகழ்வில் ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், கோ. ஆனந்தன், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, மு. அகிலா, சத்துணவு அமைப்பாளர் பீமன், சமையலர் சௌந்தர்யா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment