Wednesday, June 26, 2024
ஊத்தங்கரையில் புத்தகக் கண்காட்சி.....
புத்தகக் கண்காட்சி துவக்கவிழா......
ஊத்தங்கரை செங்குந்தர் திருமண மண்டபத்தில் இன்று (25.06.2024) ல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவன புத்தகக் கண்காட்சி துவங்கியது.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கவிழா இன்று ஊத்தங்கரை செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஊத்தங்கரை தமிழ்ச்சங்க துணைச் செயலாளரும் மூத்த கவிஞருமான இ. சாகுல் அமீது அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக மண்டல மேலாளர் அரிமா நூருல்லா செரீப் அவர்கள் கண்காட்சியை திறந்து வைத்தார். பின்னர் திரு எஸ். முரளிதரன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்வில் கவி. செங்குட்டுவன், லோகநாதன் சேகர், சித. வீரமணி, பழ. வெங்கடாசலம், நா. இராமமூர்த்தி, அவ்வை சுரேஷ், எழுஞாயிறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வே. கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணவேணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியில் கிளை மேலாளர் இரா. தியாகராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
கண்காட்சியில் ஊத்தங்கரை கவி. செங்குட்டுவனின் நூல்கள் உள்ளிட்ட கவிதை, கட்டுரை, சுய முன்னேற்றம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சிறுவர் நூல்கள், பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான நூல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக நகரும் ஊர்திகள் மூலமாக மட்டுமே விற்பனை செய்துவந்த இந்த நிறுவனம் தற்போது அரங்கில் காட்சிப்படுத்தி விற்பனைக்கு கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குறியது.
Subscribe to:
Posts (Atom)