ஊத்தங்கரையில் தமிழ் இணையப் பயிலரங்கு
ஊத்தங்கரையில் தமிழ் இணையப் பயிலரங்கு ஊத்தங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் ஸ்ரீ வித்யாமந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. அதில் புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரி பேராசிரியர் திரு முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் கலந்துக்கொண்டு பயிலரங்கை மிகச் சிறப்பாக நடத்தினார். முன்னதாக ஊற்றங்கரை வித்தியாமந்திர் கல்லூரியில் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று காலை பத்து முப்பது மணியளவில் தொடங்கியது. ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி,கல்லூரி மாணவர்கள் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். கல்லூரியின் தாளாளார் திரு.வே.சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் திரு.பழ. பிரபு உள்ளிட்ட விடுதலை வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் ஊத்தங்கரை கவி.செங்குட்டுவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சென்னையிலிருந்து பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் கலந்து கொண்டு இணையப் பயிலரங்கத்தை அறிமுகம் செய்து உரையாற்றினார்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home