Saturday, June 29, 2024

பள்ளி மாணவர்களின் களப் பயணம்....

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இன்று களப் பயணம் மேற்கொண்டனர். பள்ளியில் 4 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் 50 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் ஊத்தங்கரையில் உள்ள முக்கிய இடங்களைப் பார்வையிட களப் பயணம் மேற்கொண்டனர். இதில் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம், புத்தகக் கண்காட்சி, நூலகம், காவல் நிலையம் ஆகியவறைப் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளைக் கேட்டு அறிந்துக்கொண்டனர்.
தம்முடைய வகுப்புப் பாடங்களில் படித்த பல்வேறு செய்திகளை நேரடியாகக் கேட்டுத் தெரிந்துக் கொண்டதில் மாணவர்கள் பெரும் மகிழ்வு கொண்டனர். இதில் உடன் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் வே. சண்முகம், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, மு. அனிதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0 google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0