Wednesday, July 31, 2024

5 ரூபாய்க்கு தேநீர், யாரை அவமதிக்கிறது கல்வித் துறை..... ஆசிரியர்களையா, பெற்றோர்களையா.....

அனைத்து அரசு துவக்க / நடுநிலை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு எனும் நிகழ்வு இம்மாதம் முழுவதும் நடைபெற உள்ளது. அதன் முதல் நிகழ்வு வரும் 02.08.2024 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுமையும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பெற்றோர்கள் கலந்தாலோசனைக் கூட்டமும், தொடர்ந்து 10.08.2024, 17.08.2024, 24.08.2024, 31.08.2024 ஆகிய நாட்களில் 4 கட்டமாக பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களும் தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு தனியாக அரசாணையே வெளியிட்டு உள்ளது. இக்கூட்டங்களில் அனைத்து பெற்றோர்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டியது சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலையாயப்பணியாகும். இக்கூட்டங்களில் பங்கு பெறும் அனைத்து பெற்றோர்களுக்கும் தேநீர் வழங்கிட கல்வித்து றையால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. எவ்வளவு தெரியுமா, அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் பெருந்தொகை, ஆம் ஆளுக்கு 5 ரூபாய் வீதம் தேநீர் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ஏதோ கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட செயல்முறைக் கடிதம் அல்ல 30.07.2024ல் போடப்பட்ட கடிதம்தான். இன்றைய காலகட்டத்தில் 5 ரூபாய்க்கு எங்கே தேநீர் கிடைக்கும், ஒதுக்கீடு செய்தவர்களுக்கே இது வெளிச்சம். அவர்கள் இந்த உலகத்தில்தான் உள்ளார்களா? தெரியவில்லை. இதன் மூலம் கல்வித்துறை யாரை அவமதிக்கிறது என்பதுதான் இப்போதைய சந்தேகம். செலவினத்தை மேற்கொள்ள உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களையா? அல்லது கூட்டத்திற்கு பங்கேற்க வ்ரும் பெற்றோர்களையா.......

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0 google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0