சீன வானொலி
தமிழ் பிரிவின் பொன்விழா ஆண்டு சிறப்பு கட்டுரை, கவிதைப் போட்டிகள் அறிவிப்பு.
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்
மாநகரில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி சீன வானொலி ஆகும். இது நமது தமிழ் மொழி உள்ளிட்ட 38 அந்நிய மொழிகளில்
தனது தினசரி ஒலிபரப்பை நிகழ்த்தி வருகிறது. 1941ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 3ஆம் நாள் தனது ஒலிபரப்பைத் துவங்கிய சீன வானொலி நிலையம். துவக்கத்தில் ஜப்பானிய
மொழியில் மட்டும் தினமும் 15 நிமிடத்திற்கு தனது நிகழ்ச்சிகளை
ஒலிபரப்பியது. தற்போது 61 ஆண்டுகளுக்குப் பின் 38 அந்நிய மொழிகள், சீன மொழி மற்றும் 4 உள்ளூர் மொழிகள் என ஒரு நாளுக்கு 233 மணி நேர நிகழ்ச்சிகளை
தினமும் ஒலிபரப்பி வருகின்றது..
1998ம் ஆண்டு டிசம்பர் திங்களில் சீன வானொலி நிலையம் தனது இணைய தளத்தைத் துவக்கியுள்ளது. தற்போது சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு மொழி, ஜெர்மன், ஜப்பானிய, ரஷிய மொழி, ஸ்பெனிஷ் மொழி, போர்த்துக்கீசியம்
மற்றும் தமிழ் மொழி உள்ளிட்ட 16 அந்நிய மொழிகளில் இணையதளம் செயல்படுகிறது.
சீன வானொலியின்
தமிழ் ஒலிபரப்பு 1963 ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் முதல் நாள் துவக்கப்பட்டது.
இவ்வாண்டு அதன் பொன்விழா ஆண்டு ஆகும்.
அதைச் சிறப்பிக்கும் வகையில் கிருஷ்ணகிரி
மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம் சார்பில் வானொலி நேயர்கள் மற்றும் மாணவர்கள்
பொது மக்கள் பங்கு பெறும் வகையில் ”உலக அரங்கில் இந்திய சீன நட்புறவின் அவசியம்” என்ற
தலைப்பில் நடத்திட திட்டமிட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல், இரண்டாம்,
மூன்றாம் பரிசுகள் முறையே ரூ1000, ரூ500, ரூ300 என
ரொக்கத் தொகையும், சீன வானொலியின் பரிசுப்
பொருட்களும் வழங்கப்படும். படைப்புகளை அனுப்பிட வேண்டிய இறுதி நாள் 31.12.2012. அனுப்ப வேண்டிய முகவரி : கவி.செங்குட்டுவன், மாவட்டத் தலைவர், கிருஷ்ணகிரி மாவட்ட சீன வானொலி
நேயர் மன்றம், ஊத்தங்கரை – 635207. மின்னஞ்சல் : rajendrankavi@yahoo.co.in.