கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவாக ரூபாய் 206 கோடி செலவில் மதுரை மாநகரில் நூலகம் அமைக்கத் திட்டமிட்டது. இதன் தொடர்ச்சியாக 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நூலக கட்டுமானப் பணிகள் துவங்கியது. இந்நூலக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்நூலகத்தினை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் சூலை 15, 2023 அன்று திறந்துவைத்தார். இந்நூலகம் சுமார் 206 கோடி ரூபாய் செலவில் 6 தளங்களுடன் 2 லட்சத்து 13 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 5 இலட்சம் புத்தகங்கள் வைக்க வசதியுடன் அமைக்கப்பட்ட இந்நூலகத்தில் தற்பொழுது 3.5 இலட்சம் புத்தகங்கள் உள்ளன. புத்தகங்கள் அனைத்தும் எண்ணிம வடிவில் வகைப்படுத்தி அடுக்கப்பட்டுள்ளன, எனவே வாசகருக்குப் புத்தகத்தின் இருப்பை அறிந்து, தேடுவது எளிதாகும்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home