Monday, January 26, 2026

77 வது இந்திய குடியரசு நாள் விழா....

77 வது இந்திய  குடியரசு நாள் விழா....

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (26.01.2026) *77வது இந்திய குடியரசு நாள் விழா* நடைபெற்றது.

முன்னதாக காலை இறைவணக்கக் கூட்டத்தில்,   பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் உதவி ஆசிரியர் சோ. சிவகுருநாதன் அனைவரையும் வரவேற்றார்.
உதவி ஆசிரியர்கள் கோ. ஆனந்தன், மா. யோகலட்சுமி, ரா. ஜீவா, கணினி பயிற்றுநர் ச. மரகதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தத்தம் திறன்களை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய பள்ளித் தலைமை ஆசிரியர் *குடியரசு நன்னாளின் சிறப்புகளை எடுத்துக்கூறி, இந்நாள் கொண்டாடப்படுவதன் அவசியம் இந்திய குடி மக்களின் கடமைகளையும் உரிமைகளையும் விரிவாக எடுத்துக் கூறினார்.* தொடர்ந்து
நிகழ்வில் மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களை வழங்கிய திருப்பத்தூர் மாவட்டப் பிரதிநிதி திரு இரவி அவர்களுக்கும் இனிப்புகள் வழங்கிய சென்னப்பநாய்க்கனூர் மகேஸ் அவர்களுக்கும் நன்றி கூறினார்.

அடுத்து பல்வேறு இலக்கிய மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் உதவி ஆசிரியர் பூ. இராம்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

 
Ei_eThDDTdUU4P2y88K-L9uMYmpMHVhjlm2xRjDzmjKpudlan8c_sp9K4AnhNcYiA6rQVwiN7ZpygYWMWjNKtNg1wxNC844NUC0Ty-xH41pZX2qkLqdRFn2zs-zG4cZoe5TFMtwjNK854olILoTEz4VcvKhNqO5ewfZzlkAqbiDfP4r4GFXo9a0p3HBeKc" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">

google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0 google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0