ஜோதிநகர் பள்ளியில் 79ஆவது இந்திய சுதந்திர நாள் விழா....
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (15.08.2025) இந்திய திருநாட்டின் 79ஆவது சுதந்திர நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளியில் மூவர்ண தேசியக் கொடியை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள் ஏற்றி வைத்து, மாணவர்களுக்கு இந்திய சுதந்திர நாள் வாழ்த்துகளை தெரிவித்து உரையாற்றினார். தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற விழாவில் உதவி ஆசிரியர் பூ. இராம்குமார் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து உதவி ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், மா. யோகலட்சுமி, மு.அனிதா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் க. புவனேஸ்வரி, கணினி பயிற்றுநர் க. மரகதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச்சு, பாடல், கவிதை, நடனம் ஆகியவை மூலம் தமது திறமைகளை வெளிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து பல்வேறு வகையான நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், அனைவருக்கும் இனிப்பும் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கான பரிசுப் பொருள்களை ஊத்தங்கரை கணேசா மரக்கடை உரிமையாளர் திரு கணேசன் வழங்கினார். விழாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இறுதியாக உதவி ஆசிரியர் கோ. ஆனந்தன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home