இந்திய திருநாட்டின் 76ஆவது குடியரசு நாள் விழா…..
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (26.01.2025) இந்தியத் திருநாட்டின் 76ஆவது குடியரசு நாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னாதாக பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இறை வணக்கக் கூட்டத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் குடியரசு நாள் வாழ்த்துகள் தெரிவித்தார். பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற விழா நிகழ்வில் உதவி ஆசிரியர் சோ. சிவ வரவேற்புரை ஆற்றினார். ஆசிரியர்கள் கோ. ஆனந்தன், மா. யோகலட்சுமி, மு. அனிதா, மு. அகிலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் குடியரசு என்பதன் பொருள், இந்திய திருநாட்டின் குடியரசு நாள் விழா கொண்டாடுவதன் அவசியம், இந்தியக் குடியரசின் மக்களாகிய நமது கடமைகளும், உரிமைகளும் குறித்து விரிவாகப் பேசினார். தொடர்ந்து மாணவர்கள் தமிழ், ஆங்கிலப் பேச்சு, கவிதை, பாடல் ஓவியம் மூலம் தமது திறமைகளை வெளிப்படுத்தினார். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் உதவி ஆசிரியர் பூ. இராம்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.