Thursday, April 10, 2025

பள்ளி ஆண்டுவிழா - 2024-25

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2024 -25 கல்வி ஆண்டுக்கான "பள்ளி ஆண்டு விழா" சிறப்பாக நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பள்ளி மாணவர்களின் பேச்சு, பாடல், நடனம் போன்ற கல்வி, கலை, கலாச்சாரம் தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கல்வித் துறை சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் ச. லோகேஷா, மு. சாந்தி, வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் சண்முகம், ஆகிய அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தி. வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் விஜயகுமாரி பிரகாஷ், ஆகியோரும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் க. புவனேஷ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இர. மகாலட்சுமி, கலந்துக் மணிகண்டன், சுகுணா, உள்ளிட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோகள், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு பள்ளிக் குழந்தைகளின் திறமைகளைப் பாராட்டினர். முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் பூ. இராம்குமார் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர்கள் கோ. ஆனந்தன், மா. யோகலட்சுமி, மு. அனிதா, மு. அகிலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் உதவி ஆசிரியர் சோ. சிவகுநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0 google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0