Friday, November 14, 2025

குழந்தைகள் நாள் விழா - 2025

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (14.11.2025) குழந்தைகள் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக காலை பள்ளி இறை வணக்கக் கூட்டத்தில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர், பள்ளியின் தலைமை ஆசிரியர் செ.இராஜேந்திரன் அவர்கள் இன்றைய நாளின் சிறப்பு மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவை பற்றி எடுத்துக் கூறினார். பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற விழாவில் உதவி ஆசிரியர் பூ. இராம்குமார் அனைவரையும் வரவேற்றார். உதவி ஆசிரியர்கள் கோ. ஆனந்தன், மா. யோகலட்சுமி, இரா. ஜீவா, கணினி பயிற்றுநர் ச. மரகதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் குழந்தைகள் நாளான இன்று அனைவரும் மகிழ்வோடு இருப்பது போல் வாழ்நாள் முழுமையும் மகிழ்வோடு இருந்து, ஜவகர்லால் நேருவின் தியாகத்தை போல நாமும் செயலாற்ற வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். பின்னர் மாணவர்கள் தமிழ் ஆங்கில பேச்சு, கவிதை, பாடல்கள், ஓவியம், கட்டுரைகள் மூலம் தமது திறன்களை வெளிப்படுத்தினர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியாக பள்ளிக்கு ஒலிவாங்கி மற்றும் ஒலிபெருக்கி வழங்கிய திருப்பத்தூர் மாவட்டப் பிரதிநிதி திரு டி.எம். இரவி மாணவர்களுக்கு வாழ்த்து கூறினார். பல்வேறு வகையான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் சோ. சிவகுருநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0 google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0