Sunday, October 13, 2024
விஜய தசமி ஊர்வலம்...
ஊத்தங்கரை காந்தி சாலையில் அமைந்து அருள் பாலிக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கட்ரமன சுவாமி திருக்கோயிலில் கடந்த 10 நாட்களாக நவராத்திரி உத்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை மாலை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குகாட்சி அளித்த எம்பெருமான் 10 ஆம் நாள் விஜயதசமியான இன்று ஊத்தங்கரை முக்கிய சாலைகள் வழியாக நகர் வலம் வந்தார்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் செ. இராஜேந்திரன், செயலாளர் ரவி ரெட்டியார், பொருளாளர் திலீப் சிங், தருமகர்த்தா பாலகிருஷ்ணன், சந்திரன் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் செய்து இருந்தனர்.
ஊத்தங்கரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Wednesday, July 31, 2024
5 ரூபாய்க்கு தேநீர், யாரை அவமதிக்கிறது கல்வித் துறை..... ஆசிரியர்களையா, பெற்றோர்களையா.....
அனைத்து அரசு துவக்க / நடுநிலை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு எனும் நிகழ்வு இம்மாதம் முழுவதும் நடைபெற உள்ளது.
அதன் முதல் நிகழ்வு வரும் 02.08.2024 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுமையும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பெற்றோர்கள் கலந்தாலோசனைக் கூட்டமும், தொடர்ந்து 10.08.2024, 17.08.2024, 24.08.2024, 31.08.2024 ஆகிய நாட்களில் 4 கட்டமாக பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களும் தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு தனியாக அரசாணையே வெளியிட்டு உள்ளது.
இக்கூட்டங்களில் அனைத்து பெற்றோர்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டியது சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலையாயப்பணியாகும். இக்கூட்டங்களில் பங்கு பெறும் அனைத்து பெற்றோர்களுக்கும் தேநீர் வழங்கிட கல்வித்து றையால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. எவ்வளவு தெரியுமா, அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் பெருந்தொகை, ஆம் ஆளுக்கு 5 ரூபாய் வீதம் தேநீர் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ஏதோ கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட செயல்முறைக் கடிதம் அல்ல 30.07.2024ல் போடப்பட்ட கடிதம்தான்.
இன்றைய காலகட்டத்தில் 5 ரூபாய்க்கு எங்கே தேநீர் கிடைக்கும், ஒதுக்கீடு செய்தவர்களுக்கே இது வெளிச்சம். அவர்கள் இந்த உலகத்தில்தான் உள்ளார்களா? தெரியவில்லை. இதன் மூலம் கல்வித்துறை யாரை அவமதிக்கிறது என்பதுதான் இப்போதைய சந்தேகம். செலவினத்தை மேற்கொள்ள உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களையா? அல்லது கூட்டத்திற்கு பங்கேற்க வ்ரும் பெற்றோர்களையா.......
Saturday, June 29, 2024
பள்ளி மாணவர்களின் களப் பயணம்....
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இன்று களப் பயணம் மேற்கொண்டனர்.
பள்ளியில் 4 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் 50 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் ஊத்தங்கரையில் உள்ள முக்கிய இடங்களைப் பார்வையிட களப் பயணம் மேற்கொண்டனர்.
இதில் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம், புத்தகக் கண்காட்சி, நூலகம், காவல் நிலையம் ஆகியவறைப் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளைக் கேட்டு அறிந்துக்கொண்டனர்.
தம்முடைய வகுப்புப் பாடங்களில் படித்த பல்வேறு செய்திகளை நேரடியாகக் கேட்டுத் தெரிந்துக் கொண்டதில் மாணவர்கள் பெரும் மகிழ்வு கொண்டனர்.
இதில் உடன் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் வே. சண்முகம், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, மு. அனிதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)