Sunday, October 13, 2024

விஜய தசமி ஊர்வலம்...

ஊத்தங்கரை காந்தி சாலையில் அமைந்து அருள் பாலிக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கட்ரமன சுவாமி திருக்கோயிலில் கடந்த 10 நாட்களாக நவராத்திரி உத்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை மாலை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குகாட்சி அளித்த எம்பெருமான் 10 ஆம் நாள் விஜயதசமியான இன்று ஊத்தங்கரை முக்கிய சாலைகள் வழியாக நகர் வலம் வந்தார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் செ. இராஜேந்திரன், செயலாளர் ரவி ரெட்டியார், பொருளாளர் திலீப் சிங், தருமகர்த்தா பாலகிருஷ்ணன், சந்திரன் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் செய்து இருந்தனர். ஊத்தங்கரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0 google.com, pub-6152916400805250, DIRECT, f08c47fec0942fa0